என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிஜு ஜனதா தளம் கட்சி
நீங்கள் தேடியது "பிஜு ஜனதா தளம் கட்சி"
ஒடிசா மாநிலத்தை ஆளும் பிஜு ஜனதா தளத்தில் இருந்து அக்கட்சியின் தேசிய துணை தலைவர் ரகுநாத் மோஹந்தி இன்று ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJDVP #RaghunathMohanty
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருமுறை ஆட்சி செய்தவர் பிஜு பட்நாயக். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான பிஜு பட்நாயக், பின்னர் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார்.
1997-ம் ஆண்டு பிஜு பட்நாயக்கின் மறைவுக்கு பின்னர் அவரது மகனும் தற்போது ஒடிசா முதல் மந்திரியாக பதவி வகித்து வருமவருமான நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் என்ற தனிக்கட்சியை 26-12-1997 அன்று தொடங்கினார்.
இந்த புதிய கட்சி ஒடிசா சட்டசபை தேர்தலில் 3 முறை அபாரமான வெற்றியை பெற்றது. 2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, மூன்றாவது முறை அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார். பிஜு ஜனதா தளம் என்ற புதிய கட்சி துவங்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்காக பணியாற்றி வந்த ரகுநாத் மோஹந்தி பிஜு ஜனதா தளம் கட்சியின் தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
பலசோர் மாவட்டத்தில் உள்ள பஸ்டா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 1990-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை வெற்றிபெற்ற இவர் ஒடிசா மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். ரகுநாத் மொஹந்தியின் மருமகள் வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில் இவர்மீது குற்றம்சாட்டியதால் 2013-ம் ஆண்டில் மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்டார்.
2014-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இவர் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பளிக்கவில்லை.
இந்நிலையில், இந்த தேர்தலிலும் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்பதை உணர்ந்த ரகுநாத் மொஹந்தி, பிஜு ஜனதா தளம் கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக இன்று தெரிவித்துள்ளார்.
பிஜு பட்நாயக் கடைபிடித்து வந்த கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு தற்போது வர்த்தக நிறுவனம்போல் பிஜு ஜனதா தளம் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள ரகுநாத் மொஹந்தி, விரைவில் பாஜகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #BJDVP #RaghunathMohanty
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X